பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு!

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  புதிய தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பட்ரிக் நிறஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கமலநாதன் விகிர்தனும், பொதுஜன பெரமுன சார்பில் அன்ரனி ரங்கதுசார ஆகியோரும் போட்டியிட்டனர். இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா நடத்துவது என்பது தொடர்பான வாக்கெடுப்பில், பகிரங்க வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.

இந்நிலையில், மொத்தமாக 24 அங்கத்தவர்களைக் கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இருவர் சமூகமளிக்காத நிலையில், சுயேட்சை சார்பான இரு உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி.யின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் 15 வாக்குகளையும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அன்ரனி ரங்கதுசா நான்கு வாக்குகளையும் பெற்றுக்கொண்ட நிலையில், 11 மேலதிக வாக்குகளால் கமலநாதன் விகிர்தன் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டதாக உள்ளுராட்சி ஆணையாளர் பேட்ரிக் நிரஞ்சன் அறிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பான உறுப்பினர்கள் விகிர்தனுக்கு ஆதரவை வழங்கினர்.

இதேவேளை , பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

மேலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடயிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்னர் தவிசாளராகப் பதவிவகித்த புளொட் சார்பான தவிசாளர் பதவி விலகியதைடுத்தே புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்­தவுக்கு எதி­ராக சூழ்ச்­சி! கெஹெ­லி­ய

wpengine

வவுனியா, புதிய சாளம்பைக்குளம் மக்களுடன் உறவாடிய ரிஷாட்- கலை, கலாசார நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Editor

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகம் நீரில் முழ்கியுள்ளது

wpengine