பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் மின்னல் தாக்கம்! சகோதரன் பழி சகோதரி படுகாயம்

முல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அவரின் 15 வயதுடைய சகோதரி இந்த மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , சப்ரகமுவ ,தென் , ஊவா , வடமேல் , வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திலும் பலத்த மின்னல் மற்றும் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.
மழை பெய்யும் போது சில பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

50வீத வாக்குகளை பெறாத கட்சி தலைவரை தீர்மானிக்க முடியாது! மஹிந்த அணி இது வரை சமர்ப்பிக்கவில்லை

wpengine

சுகாதார அமைச்சில் வேலைவாய்ப்பு! விண்ணப்பியுங்கள்

wpengine

உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி மீளவும் பிரேதபரிசோதனை செய்ய உத்தரவு .

Maash