பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவரே நட்டாங்கண்டப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார், காடழிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் காடழிப்பிற்கு பயன்படுத்திய மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 68 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிசார், இருவர் மீதும் அரச காணியை அத்துமீறி பிடித்தல் மற்றும், பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கைளை முன் வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார், குறித்த வழக்கை வரும் 08ம் மாதம் 09ம் திகதி மாங்குளம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்

Related posts

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு மரைக்காரின் முயற்சியினால் நிதி உதவி

wpengine

அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

wpengine

2000கிராம சேவையாளர் வெற்றிடம்! உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு

wpengine