பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக பெருந்திரளானோர் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தமது வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

16வருட காலங்களுக்குள் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கிடைத்த நன்மைகள்,சேவைகள் என்ன?

wpengine

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

Maash

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிரான பிரேரணை! 3மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம்

wpengine