பிரதான செய்திகள்

முல்லைத்தீவின் அனைத்து தனியார் பேரூந்து சங்க அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிறு 12/02/2017 காலை 11 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் முல்லை மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 89 உரிமையாளர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த பொதுக்கூட்டத்தில் நீண்டகாலமாக உள்ள சில  தற்காலிக வழி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாகவும் ஏனைய பல போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதால் அனைத்து உறுப்பினர்களும் தவறாது சமூகம் தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்

wpengine

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம்.

wpengine

வவுனியா முஸ்லிம்களின் கடையினை இலக்கு வைக்கும் நகர சபை

wpengine