பிரதான செய்திகள்

முறையான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

மக்களை ஏமாற்றும் வகையில் மாத்திரம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் மாற்றங்களை ஏற்படுத்தினால் மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

முறையான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அதனூடாகவே பொருளாதாரம் எழுச்சிப் பெறும் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் 2016ஆம் ஆண்டு அரசாங்கம் செய்துக் கொண்ட அரச கடன் முறை தொடர்பிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ்வருடத்தின் முதற்காலாண்டிற்குள் கடைசி கடன் தொகையினை வழங்கப்படவில்லை என்றால் வரவு – செலவு திட்டத்தை செயற்படுத்துவது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் .

இவ்விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்படுவதாவது.

1.5 பில்லியன் அமெரிக்க டொலரை ஆறு தவணை முறையில் பெற்றுக் கொள்ள சர்தேவ நாணய நிதியத்துடன் இலங்கை அரச கடன் ஒப்பந்தத்தை செய்துக் கொண்டுள்ள நிலையில் . இவ்வொப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த இறுதி தவனை அரச கடனை பெற்று கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதுரை காலமும் எவ்விதமான கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இந்த கடன்முறை கிடைக்கப் பெறவில்லையாயின் அரசாங் கத் தின் பல்வேறு செயற்திட்டங்கள் பாதிப்படையகூடும். மறுபுறம் மக்களுக்கு தேசிய உற்பத்திகளை வளப்படுத்த வழங்குவதாக குறிப்பிடப்படும் இலவச உர விநியோகம், மற்றும் அரச அதிகாரிகளின் வேதன அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடுகின்றது.

இவையனைத்தும் மக்களை ஏமாற்றும் ஒரு பொய்யான கருத்துக்களாகும்.

இறுதி தவனைகடன் 169 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக் கொள்ள அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள் ளது. கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட உள்ளளூர் மட்டத்திலான அரசியல் நெருக்கடியினை ஐக்கிய தேசிய கட்சி சர்தேச மட்டம் வரை கொண்டு சென்று நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியது.

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகவே அனைத்து துறை களும் பொருளாதார ரீதியில் பின்னடைவினை எதிர்கொண்டுள்ளது.

மக்களை ஏமாற்றும் வகையில் மாத்திரம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் மாற்றங்களை ஏற்படுத்தினால் மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

முறையான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அதனூடாகவே பொருளாதாரம் எழுச்சிப் பெறும் என்றார்.

Related posts

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine

டிக்கெட் விலை உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

wpengine

கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு

wpengine