புதிய முப்படைத் தளபதிகள் வியாழக்கிழமை (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
பதவியேற்ற பின்னர், முப்படைத் தளபதிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததோடு ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
![](https://vanninews.lk/wpvn/wp-content/uploads/2025/02/WhatsApp_Image_2025-02-06_at_19.07.20_f7904ebb-1024x794.jpg)
![](https://vanninews.lk/wpvn/wp-content/uploads/2025/02/WhatsApp_Image_2025-02-06_at_19.07.22_97781c91-1024x798.jpg)
![](https://vanninews.lk/wpvn/wp-content/uploads/2025/02/WhatsApp_Image_2025-02-06_at_19.07.26_26e89561-1024x828.jpg)