செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை..!!!

தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த பிணை மனுவை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபரை 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டு பயணத்தடை விதித்த நீதிபதி, சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

முழு தோல்வியடைந்த மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை!

wpengine

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்காக பல புதிய நடவடிக்கைகள் – பிமல் ரத்நாயக்க.

Maash

இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனை

wpengine