பிரதான செய்திகள்

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.


கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஊடாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பிரசாரங்களை முன்னெடுத்தார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கம் வழங்கும் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு என்பன வாழ்நாள் முழுவதும் அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

850 தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ள நடவடிக்கை

wpengine

ரணில்,மைத்திரி மோதல் மீண்டும் ஆரம்பம்

wpengine

ஜப்பான் நிதியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்.

Maash