பிரதான செய்திகள்

முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிக்கை விடும் ஹுனைஸ் பாரூக்

(மறிச்சுக்கட்டியான்)

வில்பத்துவில் எந்தப் பிரச்சினையுமில்லையென இதுவரை காலமும் கூறிவந்த ஹுனைஸ் பாரூக் வர்த்தமானி அரிவித்தல் வெளிவந்த பின்னர் மறிச்சுக்கட்டியில் முசலி மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருவதால் புதிய யுக்தியொன்றை கையாளத் தொடங்கியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் தானும், தான் அண்மையில் இணைந்த கட்சியான முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் முசலி மக்களின் பிரச்சினையைத் தீர்க்க பாடு படுவதாக வெளியுலகத்திற்கு காட்ட முனைகின்றார்.

கடந்த வாரம் ஜம் இய்யதுல உலமாவில் வில்பத்து தொடர்பில் நடந்த கூட்டம் முடிவடைந்து சூடு ஆறுவதற்குள் ஜமிய்யாவின் உத்தியோக பூர்வ ஊடகப் பொறுப்பாளர் போன்று தனது முகநூலில் அறிக்கையொன்றை விட்டார். பின்னர் வட்சப் குழுமங்களில் தான் வழங்கிய ஆலோசனயொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

நேற்று முன் தினம் ஜனாதிபதி செயலகத்தில் செயலாளர் அபயகோனுடன் முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய சந்திப்பின் பின்னர் அக்கட்சியின் ஊடகப் பிரிவை முந்திக்கொண்டு இவரே அறிக்கை விட்டார். அதன் பின்னர் நேற்று (04) வில்பத்து தொடர்பில் கொழும்பிலுள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் நடாத்திய சந்திப்பின் பின்னர் தன்னுடன் தான் சட்டத்தரணிகள் இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை கையளித்துள்ளதாக உளறினார்.

எல்லா விடயங்களிலும் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிக்கைகள் விடும் இந்த முன்னாள் எம் பி பேதலித்துப் போய்த் திரிகின்றார்.

இன்று மாலை சூரா கவுன்ஸில் முஸ்லிம் எம்பிக்களுடன் வில்பத்து தொடர்பில் ஒரு சந்திப்பை நடாத்தவிருக்கின்றது. இந்த முன்னாள் எம் பியும் பழைய ஐடண்டி கார்ட்டை காட்டி உள்ளே நுழைந்து குரல் பதிவை வட்சப் குழுமங்களில் பதியத்தான் போகின்றார்.

அல்லாஹு அஃலம்

Related posts

கோறளைப்பற்று பகுதியில் திருட்டு சம்பவம் மடக்கி பிடித்த வாழைச்சேனை பொலிஸ்

wpengine

சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துரையாடல்! யூரியா உரத்தினை வழங்க  உலக வங்கி இணக்கம்

wpengine

அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை தீ! காரணம் தெரியவில்லை

wpengine