உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகளால் வெற்றி

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் இன்று காலை தாக்கல் செய்தார்.

ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் வாக்கெடுப்பை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதுடன் சபையில் தீவிர நிலை அதிகரித்தது.

இதனால் சபை அமர்வு சில தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

பின்னர் மாலை 3 மணியளவில் சபை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சியினரே இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வெற்றி கிடைத்தது.

Related posts

தலைமன்னாரில் மீள்குடியேறிய மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் றிஷாட்

wpengine

1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை

wpengine

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine