பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முதல் கட்டம் கிஸ்! பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவையாளர்! இன்று நீதி மன்றத்தில்

அரச உயர் பதவிகளில் இருந்தாலும் முதிர்ச்சியான, பக்குவமான மனநிலை நமது அரச உத்தியோகத்தர்கள் பலரிடம் இருப்பதில்லை. குறிப்பாக பெண்கள் தொடர்பான பார்வையில் காமுக்கர்களாக வரையறைக்கப்படுபவர்களிற்கும், நமக்கும் வித்தியாசமில்லையென அடிக்கடி பலர் நிரூபித்து வருகிறார்கள்.


அவ்வாறான ஒரு சம்பவத்துடன் இப்பொழுது சிக்கியுள்ளார் முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராம சேவகரும்,முத்தரிப்புத்துறை மேற்கு கிராமத்தின் பதில் கடமை கிராம சேவகருமாகிய மரியான் சுரேஷ் டபறேரா
வறுமையின் நிமிர்த்தம் வாழ்வாதார உதவி கோரல்களுக்கு செல்லும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்று வந்த கிராம சேவகர் நேற்று பிற்பகல் சிலாவத்துறை பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார்.


பாதிக்கபட்ட பெண் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யபட்டதாக உறுதிபடுத்தபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கைது செய்யபட்ட கிராம சேவகர் இன்று நீதிமன்றில் முற்படுத்த இருபதாகவும் குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவரையும் சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்கு வருகை தருமாறு பொலிசாரினால் அறிவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தகவல்

www.newmannar.lk

புதியவன் இணையதளம்

Related posts

ஐ.நா.வின் அறிக்கையாளரை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

wpengine

வேதாளம் மீண்டும் முஸ்லிம் சமஸ்டியில்!

wpengine