பிரதான செய்திகள்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பாலித தெவரபெரு உண்ணாவிரதம்

மதுகம, மீகஹதென்ன ஆரம்ப வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மதுகம வலயகல்வி
அலுவலகத்தின் முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும்
தொடர்கின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வலயகல்வி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள பாதையை சில்லுகளையிட்டு மறைத்துள்ளதாக  தெரியவருகின்றது.

இதனால் அந்த பாதையில் தற்போது கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார
பிரதி அமைச்சர் பாலித தெவரபெருவும் இணைந்து கொண்டுள்ளார்.

Related posts

வட பகுதி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த கோரிக்கை

wpengine

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

wpengine

‘இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவது சந்தேகம்’

Editor