செய்திகள்பிரதான செய்திகள்

முட்டை விலையை குறைப்பதற்கு தீர்மானம்…!

முட்டை விலையை 2 ரூபாயினால் குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், முட்டை உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கும், கோழி இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆவாரா?

wpengine

5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை! அரசாங்க பல்கலைக் கழகங்களில்

wpengine

மே தினத்திற்கான விசேட பாதுகாப்பு திட்டம்!

Editor