பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி விதாதா நிலையத்தின் அவல நிலை! கவனம் செலுத்தாத அதிகாரிகள் பிரதேச மக்கள் விசனம்

(முஹம்மட் இம்ரான்) 

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் கீழ் சிலாவத்துறை பிரதான சந்தியில் அமைந்துள்ள விதாத வள நிலையம் திறந்ததில் இருந்து இதுவரைக்கும் முசலி பிரதேசத்தில் உள்ள தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு சேவையினை வழங்கி வைக்கப்படவில்லை எனவும், அலுவலக வேலை நேரத்தில் ஒரு நாள் கூட திறப்பதில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் பிரதேச மக்களை தொடர்பு கொண்டு வினவிய போது;

முசலி பிரதேசத்திற்கு என விதாதா உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டும் அமைச்சின் ஊடாக என்ன சேவைகளை பெறலாம் என்று கூட இந்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தெரியாது எனவும்,உத்தியோகத்தர்களுக்கும்  எங்களுக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது எனவும்,இந்த அலுவலகம் பல லச்சம் ரூபா செலவு செய்து கட்டினாலும் திறந்து கடந்த 6மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்பு இதுவரைக்கும் மீண்டும் திறக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

விதாதா நிலையத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற நிதிகள்,வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டத்தில் கூட மக்களுக்கு தெரிவிப்பதில்லை, அது போன்று இந்த நிலையத்தின் செயற்பாடு தொடர்பாக இதுவரைக்கும் வெளிப்படை தன்மையினை நாங்கள் காணவில்லை எனவும் தெரிவித்தனர்.

 இந்த நிலையத்தின் திறப்பு விழாவுக்கு விதாதா அமைச்சின் பிரதி அமைச்சர்,அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையத்தின் சேவையினை பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ளவும், அலுவலக வேலை நேரத்தில் திறந்து வைப்பதற்கும் வன்னி அபிவிருத்தி குழு தலைவர்கள்,அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,சமூக சிந்தனையாளர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றார்கள்.
(இது தொடர்பில் பதில் அறிக்கையினை சம்மந்தப்பட்ட நிலைய உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்க முடியும்) 

Related posts

மஹிந்தவின் பொதுஜன பெரமுண இரண்டாவது ஆண்டு நிறைவு

wpengine

நஞ்சற்ற விவசாயப் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி: பசுமை விவசாயம்

wpengine

நுவரெலியா முஹம்மது பௌசுல் ஹமீதுக்கு உதவி செய்யுங்கள்

wpengine