பிரதான செய்திகள்

முசலி வர்த்தகமானி அறிவித்தல்! மீண்டும் வருகை தரும் ஜனாதிபதி ஆணைக்குழு

(முஜீபுர் ரஹ்மான்)

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவில்லு, வெப்பல் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக அறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு முசலிப் பிரதேசத்திற்கு வருகின்றது.

எனவே, மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, முள்ளிக்குளம், கொண்டச்சி, அகத்திமுறிப்பு, பொற்கேனி, வேப்பங்குளம் ஆகிய கிராமத்தவர்கள் தங்களது கிராமங்களின் தகவல்கள் மற்றும் தேவைகள் என்பவற்றை தெளிவாக முன்வைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

அத்தோடு முசலிப் பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமங்களான சிலாபத்துறை மற்றும் வார்வெளி கிராமத்தவர்களின் பிரச்சினைகளையும் இதன்போது எடுத்துக்கூறுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

அத்தோடு ஏனைய கிராமத்தவர்களும் தங்களது கிராமங்களின் தேவைகள் குறித்து எடுத்துக் கூறலாம்.

மேலும் இப்பிரதேச விவசாயிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,

மீனவர்கள் தங்களது தேவைகள் குறித்தும் அதன்போது எடுத்துக் கூறுவது சிறந்ததாகும்.

ஏனெனில் மாவில்ல, வெப்பல் வர்த்தமானி அறிவித்தல் முழு முசலிப் பிரதேசத்தையும் பாதிக்கின்றது.

அன்பின் முசலி உறவுகளே எப்போதும் போல் இவ்விடயத்தில் அசமந்தத்தனமாக இருந்துவிடாதீர்கள்.

Related posts

கள அலுவலர்கள் ,பல அரச நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள்.

wpengine

விவசாய திணைக்களத்தின் சமூக பொருளாதார இணையத்தளம்

wpengine

சரண் பிணை கைது மீண்டும் பிணை! ஞானசாரரின் மின்னல் வேகம்

wpengine