பிரதான செய்திகள்

முசலி பிரதேச இணக்க சபைக்கு தகுதியான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களா?

(முசலி ஊரான்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முசலி இணக்க சபைக்கு தகுதியான உறுப்பினர்கள் மிண்டும் நியமிக்கப்படுவார்களா ? என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்.

புதிய இணைக்க சபை உறுப்பினர்களுக்கான நேர்முக தேர்வு எதிர்வரும் திங்கள் கிழமை (11)  இடம்பெற உள்ளது என்பதுடன் இதில் கூட ஒரு சிலருக்கு மட்டும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இணக்க சபையில் இருக்கின்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக முசலி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் என்பதுடன் இவர்களை முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் செயலாளர் செ.கேதீஸ்வரன் அவர்களின் சிபாரிசின் பேரில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள்.

அவருக்கு விருப்பமான பிரதிநிதிகள் என்று கூட சொல்ல முடியும். அது போல் முன்னால் பிரதேச செயலாளர் மீது பொது மக்கள் பல குற்றச்சாட்டுகள் சுமத்திய போதும் அந்த விடயத்தில் இணக்க சபை நீதியாக நடந்துகொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளாக முசலி பிரதேச செயலகத்தில் சிற்றூழியர்களாக வேலை செய்யும் நபர்கள் அங்கத்தவராகவும்,முசலி பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்காமல் மன்னார் மாவட்டத்தில் வசிக்கின்றவர்கள் கூட அங்கத்தவர்களாக உள்ளார்கள்.மன்னாரில் வசிக்கின்ற அங்கத்தவரின் சகோதரன் முசலி பிரதேச செயலகத்தில் சுமார் 10வருடகாலமாக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று அதிகமான இஸ்லாமிய உறுப்பினர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்படுகின்றது.

பாரிய பொறுப்பு மிக்க இந்த உயர் சபையில் சிறு தொழில் செய்வோரும்,சமூகத்தால் மதிக்கப்படாதவர்களும் அங்கத்தவர்களாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த முறையாவது பொருத்தமான உறுப்பினர்களை நியமிக்க நீதி அமைச்சு,அரசாங்க அதிபர்,முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Related posts

கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன

wpengine

தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஜமாஅத்தே இஸ்லாமி இல்லை. ஆனால் தலைவர் பயங்கரவாதி ? இது ஏன் ?

wpengine

ஊழல், கொலை, திருடர்கள் நீதியின் முன்னால் கொண்டு வருவேன்

wpengine