பிரதான செய்திகள்

முசலி கோட்டத்தின் அசமந்த போக்கு கவனம் செலுத்தாத மன்னார் வலையக் கல்விப்பணிப்பாளர்

(அபு முசலியூர்)

மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்திற்குவுட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி முசலி கோட்டக்கல்வி பணிப்பாளர் தலைமையில் முசலி கோட்ட வளாகத்தில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.

இதன் போது அதிகமான மாணவர்கள்,ஆசிரியர்கள் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்கியதாகவும் தெரிவிக்கின்றன.

அந்த வெயில் தாக்கத்தின் காரணமாக ஒரு சில மாணவ,மாணவிகள் மருத்துவ ஆலோசனைகளை கூட பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கபெற்றுள்ளன.

இப்படியான நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போது வலையக்கல்விப் பணிப்பாளர்,கோட்டக் கல்வி பணிப்பாளர் அதிக கவனம் செலுத்த  வில்லையெனவும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள்,ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related posts

சிங்கள மக்கள் மீது கபீர் ஹாசீம் காட்டும் கரிசனையினை கடுகளவாவத முஸ்லிம்கள் மீது காட்டுவாரா?

wpengine

வட,கிழக்கு மாகாணங்களில் ஊழியர்கள் வெற்றிடம் -தினேஷ் குணவர்த்தன

wpengine

தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்

wpengine