பிரதான செய்திகள்

முசலி கோட்டப் பாடசாலை ஆசிரியர்கள்! பாட நேரத்தில் விடுதியில் தூக்கம்

(முசலியான்)

மன்னார் மாவட்டத்தில் முசலி  கல்வி கோட்டத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றிலும்,மாகாண பாடசாலை ஒன்றிலும்  ஆசிரியர்களாக கடமையாற்றும் ஒரு சில ஆசிரியர்கள் பாட நேரத்தில் ஆசியர்கள் விடுதியில்  ஒய்வு எடுக்க செல்கின்றார்கள் என அறியமுடிகின்றது.

முசலி தேசிய பாடசாலை மற்றும் பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக கட்டிய ஆசிரியர்கள் விடுதியில் ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு கல்வியினை கற்றுக்கொடுக்காமல் நேரத்தை வீண் விரயம் செய்யும் நோக்குடன் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றார்கள் என வலையக் கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடுகளை கூட பெற்றோர்கள் வழங்கி உள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக முசலி கோட்டத்தில் அதிபர்களுக்கு இடம்பெறும் கூட்டத்தில் கூட கோட்டக் கல்வி பணிப்பாளர் தனது கண்டனத்தை கூட வெளியீட்டு உள்ளார் என அறிய முடிகின்றது.

அப்பாவி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உரிய அதிபர்கள் கரிசனை எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சமூக ஆர்வளர்கள் கோரிக்கையினை விடுகின்றனர்.

Related posts

தாஜுதீன் படுகொலை : என்னை தாக்க முற்பட்டவர்களை விசாரணை நடத்துக

wpengine

500 கோடி அளவில் மோசடி! கணவன் தனது மனைவியால் படுகொலை

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

wpengine