(ஊடகப்பிரிவு)
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடந்த 29.07.2017 அன்று முறையே காலை 9.30 மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேச செயலக மண்டபங்களில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடல்களுக்கு இணைத் தலைவர்களான வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் மற்றும் முதலமைச்சரின் பிரதிநிதியாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு கூட்டத்தை நடாத்தினர்.