பிரதான செய்திகள்

முசலி அல்லிராணி கோட்டை பகுதியில் கேரள கஞ்சா

மன்னார் -அரிப்பு பகுதியான அல்லி ராணி கோட்டை கடற்கரை  பகுதியில் கேரள கஞ்சாவுடன் மீனவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

கைதுசெய்யப்பட்ட மீனவரிடம் இருந்து 139.5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 39 இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மீனவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் சிலாவத்துறை பொாலீஸ் நிலைய அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு வினவிய போது இது தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும்  மன்னார் பிரிவு அதிகாரிகள் மீட்டு உள்ளதாக அறியமுடிகின்றது என்றும் தெரிவித்தார்.

Related posts

பாலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..!

Maash

WhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்

wpengine

நுவரெலியாவில் புதிய நான்கு பிரதேச சபை! சாய்ந்தமருது?

wpengine