உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முகமதுசமி மனைவி சூதாட்ட புகார்!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமதுசமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய முயற்சித்ததாக ​பொலிஸில் புகார் அளித்தார். 

தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது சமி துபாய் சென்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதன் அடிப்படையில் கொல்கத்தா பொலிஸார் முகமது ‌சமி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். அதோடு கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது‌சமியின் தென் ஆப்பிரிக்க பயண விவரங்களை கேட்டு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்த நிலையில் முகமது ‌சமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் பினோத்ராய் ஊழல் தடுப்பு குழுவை கேட்டு கொண்டுள்ளார். அதன் தலைவர் நீரஜ்குமாருக்கு இ மெயிலில் இதை தெரிவித்துள்ளார்.

Related posts

மொட்டுக் கட்சியில் பிளவுகள் சாத்தியமா?

Editor

அமைச்சர் றிஷாட் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது

wpengine

புலி கருணாவுக்கு பிரதமர் வழங்கிய புதிய இணைப்பாளர் பதவி

wpengine