சிறிலங்கா ஹிறா பெளண்டேசனின் சமூக நலத்திட்ட பணிகளில் ஒன்றாக நாடளாவியரீதியில் 500 இமாம் மற்றும் முஅத்தீன்களுக்கு இலவச உம்ரா திட்டத்தை வழங்குகிறது. அதில் முதற் கட்டமாக 100 இமாம் மற்றும் முஅத்தீன்களை இம்மாத 28 ஆம் திகதி இலவசமாக உம்ரா செய்யவதற்காக அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இன்று ( 24.03.2016) காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இலவச உம்ரா செயவதற்கான 100 பேருக்கான விமான பயணசீட்டுகள் மற்றும் இஹ்ராம் துணி இன்னும் பிற ஆவணங்களை . இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஹிரா பெளண்டேசன் தலைவர் , மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் MA.MPவழங்கி வைத்தார். 

அத்தோடு கை செலவுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 500 ரியால் பணமும் வழங்கப்பட்டது.