பிரதான செய்திகள்

மு.கா கட்சியின் பிரதி அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தொடர் அழுத்தம்

கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் 82 சதவீதமான நிதியினை தனியே ஒரு வைத்தியசாலைக்கு ஒதுக்குவதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார சேவைக்கென கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 4600 மில்லியன் ரூபா நிதியினை நிந்தவூர் வைத்தியசாலைக்கு மட்டும் ஒதுக்கி வைத்தியசாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் பைசல் காசிம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தொடர் அழுத்தம் பிரயோகித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில் மீளவும் தன்னுடைய செயலாளர் ஊடாக பணிப்பாளரை தொடர்புகொண்ட பைசர் காசிம் எதிர்வரும் ஆண்டுக்கென ஒதுக்கப்படவிருக்கும் நிதியினையும் சேர்த்து 9200 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கி நிந்தவூர் வைத்தியசாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இவ்வாறு கணிசமான தொகையினை தனியே ஒரு கிராமிய வைத்தியசாலைக்கு ஒதுக்குவதால் ஏனைய பகுதிகளுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியாது என்பதை காரணம் காட்டி பணிப்பாளர் நிராகரித்திருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் மாற்றித்தருமாறு பைசல் காசிம் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 18ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஒரே ஒரு வைத்தியசாலையை மட்டுமே மத்திய அரசின் கீழ் தரமுயர்த்த முடியும் எனத் தெரிவித்த பணிப்பாளர், அக்கரைப்பற்று, கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் உள்ளமையை சுட்டிக்காட்டி அதற்கும் உடன்பட மறுத்துள்ளார்.

இந்த நிலையில் “உன்னை நேர வந்து பாக்கிறன்“ என்று தொலைபேசியில் கடும் தொனியில் தெரிவித்த பைசல் காசிம் இன்று மாகாண சுகாதாரப் பணிப்பாளரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து கிழக்குக்கு என ஒதுக்கப்பட்ட நிதியினை நிந்தவூர் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக்கு நடந்தது என்ன?

wpengine

றிஷாட்டை வீழ்த்த சில தமிழ்,சிங்கள இனவாதிகள்! தீனிபோடும் தலைவர் ஹக்கீம்

wpengine

அதிகாரம் தன்னிடம் இருந்திருக்குமாயின்! ஆளும் கட்சியில் பலர் இருந்திருக்க மாட்டார்கள்

wpengine