உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் கட்டாரை மீரட்டும் சவுதி அரேபியா

கட்டார் விமானங்கள் தம் நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தால் அதற்கெதிராக தாக்குதல் மேற்கொள்வதற்கான சகல அதிகாரங்களும் தமக்கு இருப்பதாக சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

பயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கட்டார் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம் சாட்டி சவுதி அரேபியா தலைமையிலான நான்கு நாடுகள் இராஜ தந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன.

சவுதி அரேபியாவானது கட்டாருடனான உள் நாட்டு, வெளி நாட்டு தொடர்புகளை முற்றாக துண்டித்து கொண்ட நிலையில் சவுதி எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதை தவிர்க்குமாறு அறிவித்திருந்தது.

கட்டார் அதற்கு செவிசாய்க்காமல் சவுதி அரேபிய எல்லைக்குள் அத்து மீறி நுழையுமெனில் தாக்குதல் நடாத்தி விமானங்களை வீழ்த்த தங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் எந்த நேரத்திலும் சீராகவும் தயாரகவும் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலை தொடருமெனில் வளைகுடாவில் மற்றுமொரு போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

Related posts

முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி செய்யுங்கள்

wpengine

பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார்.

wpengine

தலைவர், உப தலைவர் நியமனத்தின் போது ஊழல் மோசடிகள்

wpengine