பிரதான செய்திகள்

மீண்டும் இனவாதம் பேசும்! அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று மங்களராமய விகாரையில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வாழைச்சேனை மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உறுதியுடைய காணிகளை முஸ்லிம் அமைப்பு ஒன்று அத்துமீறி புகுந்து அந்த மக்களுக்கு அநீதிகளை இழைத்து வருகின்றது.

அப்பாவித் தமிழ் மக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதேச செயலாளர் வாழைச்சேனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

முஸ்லிம் அமைப்புக்கள் பொத்துவில் இருந்து மூதூர் வரைக்குமான கரையோரப் பிரதேசம் ஒரே நகரம் என்ற அளவிற்கு உருவாகியுள்ளது.

அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு என ஆசியாவிலே பெரிய பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதாக குறிப்பிடுகிறார்.

இதில் தமிழ் சிங்கள மாணவர்கள் முஸ்லிம் பள்ளியில் சென்று படிக்க வேண்டுமா? என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

பேரின வாதிகளும்,குறுகிய சிந்தனையாளர்களும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை குறை கூறியும், கொக்கரித்தனர்.

wpengine

சமஷ்டியை வென்றெடுக்கும் இராஜதந்திரம்

wpengine

வெள்ள அகதிகளுக்காக களத்தில் நின்று உதவும் றிசாத் அமைச்சர்

wpengine