(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திற்கான அபிவிருத்தி மற்றும் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதற்கென கிழக்கு மாகாண சபையினூடாக சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட மில்லத் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்திற்கான திருத்த வேலைகள் மற்றும் சுவர்களுக்கான வர்ணம் பூசும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நடைபெற்றுவரும் இவ்அபிவிருத்திப் பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் நேரில்சென்று பார்வையிட்டார். இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களை சந்தித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பாடசாலையின் மேலதிக தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.