பிரதான செய்திகள்

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் வில்­பத்­துவில் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருக்க வேண்டும் ஞான­சார தேரர்

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

இலங்­கையில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் உட­ன­டி­யாக அவர்­க­ளது நாட்­டுக்குத் திருப்­பி­ய­னுப்­பப்­பட வேண்டும். 
அக­திகள் என்ற போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு அரசு இட­ம­ளிக்கக் கூடாது. கட­லோர பாது­காப்பு பலப்­ப­டுத்த வேண்டும் என அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுப்­ப­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குறிப்­பிட்டார்.

இவர்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­று­வ­தற்கு அல்­லது வில்­பத்­துவில் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருக்க வேண்டும். ரோஹிங்யா முஸ்­லிம்கள். அவர்­க­ளது நாட்­டிலே பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­ப­வர்கள். இவர்­களைப் பற்றி அறி­யாது கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் அவர்­களை கிழக்கில் அல்­லது நாட்டில் எங்­கா­வது குடி­யேற்ற வேண்டும் என்று அறிக்கை வெளி­யிட்­டி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது என்றும் தெரி­வித்தார்.

நேற்று மதியம் பௌத்த மத்­திய நிலை­யத்தில் இடம்­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

கிழக்கில் எங்­க­ளுக்­கென்று புரா­தன வர­லாறு ஒன்று இருக்­கி­றது. தொல்­பொ­ருள்கள் பரந்து கிடக்­கின்­றன. என்­றாலும் அங்கே சிங்­க­ள­வர்கள் அக­திகள் போன்றே வாழ்க்கை நடத்­து­கி­றார்கள். முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் எப்­போதும் அவர்­களை எதிர்த்து வரு­கி­றார்கள். எங்­க­ளது காணி­களை அப­க­ரித்­தி­ருக்­கி­றார்கள். அர­சாங்­கமோ கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரோ இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வில்லை. ஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் எங்­கி­ருந்தோ வந்த முஸ்லிம் அக­தி­களை கிழக்கில் குடி­யேற்ற முயற்­சிக்­கிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷுரா கவுன்ஸில், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்குப் பிரச்­சினை முஸ்­லிம்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன, பௌத்­தர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வதால் பீதி­யுடன் வாழ்­கி­றார்கள் என்­றெல்லாம் உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் பிர­சாரம் செய்­த­வர்கள் இன்று மியன்மார் முஸ்லிம் அக­தி­களைக் குடி­யேற்­று­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

10 வரு­டங்­க­ளுக்கு முன்பு ரோஹிங்­யாவில் பௌத்த முஸ்லிம் கல­வ­ரங்கள் நடக்­க­வில்லை. ஆனால் அவர்கள் இது எமது நாடு என்று கூறி பௌத்த மத­கு­ரு­மா­ரையும் பௌத்­தர்­க­ளையும் தாக்க முற்­பட்­ட­த­னா­லேயே பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து ரோஹிங்­யா­வுக்கு முஸ்­லிம்கள் சொல்­கி­றார்கள். இதனால் அங்கு முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரித்­துள்­ளது.

இலங்­கையில் முஸ்லிம் அக­திகள்
வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொடர்ந்து முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக வந்து குடி­யே­று­கி­றார்கள். நீர்­கொ­ழும்பில் மாத்­திரம் 1500 பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் போதைப்­பொருள் விற்­பனை போன்ற சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இவர்­களால் எமது கலா­சாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து முஸ்­லிம்கள் பௌத்த மத குருக்கள் போல் வேட­மிட்டு காவி­யுடை அணிந்து இலங்கை வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். பாது­காப்பு பிரி­வி­ன­ரதும் உளவுப் பிரி­வி­ன­ரதும் தக­வ­லின்­படி இந்­தி­யாவில் 14 ஆயிரம் பேர் அக­தி­க­ளாக இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றார்கள். சவூதி அரே­பியா அக­தி­க­ளுக்கு புக­லிடம் வழங்­கு­வ­தற்கு மறுத்­துள்ள நிலையில் ஏன் நாம் அவர்­க­ளுக்குப் புக­லிடம் வழங்க வேண்டும். எனவே மியன்மார் அக­திகள் உட­ன­டி­யாக நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட வேண்டும்.

பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்தும் முஸ்­லிம்கள் இலங்­கைக்கு வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். மாலை­தீ­வி­ருந்து மாத்­திரம் இங்கு வந்து 50 ஆயிரம் பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் பல்­வேறு சட்ட விரோத செயல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள். பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களால் கொழும்பு மீதொட்­ட­முல்லை குப்­பை­மேடு போலா­கி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் மீதொட்­ட­முல்லை அனர்த்­தத்தை விட பாரிய அனர்த்தம் இங்கு ஏற்­படும். இந்த விட­யங்­களை நாம் எடுத்துச் சொன்னால் நாம் சதி செய்­ப­வர்கள், இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சிப்­ப­வர்கள் என எம்­மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

மோடிக்கு கறுப்­பு­கொடி
தேசப்­பற்­றுள்ள இயக்­கங்­களும் மக்­களும் வெசாக் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொள்ள வருகை தரும் இந்­திய பிர­தமர் மோடிக்கு கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரி­விக்க வேண்டும் என்­கி­றார்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச இந்தக் கோரிக்­கையை விடுத்­துள்ளார். இலங்­கையை இந்­தி­யாவின் கொல­னி­யாக மாற்­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று குற்றம் சாட்டியே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைக்கேற்பவே திட்டங்களை வகுக்கிறது. பிரதமர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதியையே மக்கள் சாடுகின்றனர். மோடிக்கு கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பதை நாம் விரும்பவில்லை. தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்க நாம் முன் நிற்கமாட்டோம் என்றாலும் இலங்கையை இந்தியாவின் கொலனியாக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.

Related posts

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine

30 அமைச்சர்களுக்கு புதிய வாகனம்! ஹக்கீமுக்கு ரூபா 3 கோடி 50 இலட்சம்.

wpengine

அரசியல்வாதிகளை தோற்கடிக்க பௌத்த பிக்குகள் முன்வருவார்கள்

wpengine