பிரதான செய்திகள்

மின்சாரத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்து தற்போது ரயிலை மறித்து போராட்டம்

வவுனியாவில் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்து தற்போது ரயிலை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


வவுனியாவில் தற்போது ரயில் ஒன்றை முற்றுகையிட்டுள்ள மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் – ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்று மாலை தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சாரசபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஆறு மின்சாரசபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், வவுனியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அதிருப்தி அடைந்துள்ள மக்கள் சற்றுமுன்னர் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது ரயிலை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடமாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச

wpengine

மீள்குடியேற்ற செயலணி! பாரூக் வடபுல முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்று தூரோகத்தை செய்ய தூண்டுகின்றார்.

wpengine

மன்சூரின் காடைத்தனம் இனியும் செல்லாது.

wpengine