பிரதான செய்திகள்

மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை

சுகயீன விடுமுறையை அறிவிக்கும் வகையில் இன்று (18) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் செயற்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

Related posts

2022ல் திருத்தப்பட்ட முஸ்லிம் விவாக ,விவாகரத்துச்சட்டம் குறைகளுடன், சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை.

Maash

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

wpengine