பிரதான செய்திகள்

மின்சார கட்டணத்தை செலுத்த புதிய முறை – ஆணைக்குழு

மின்சாரம் பயன்படுத்தும் காலத்தின் அடிப்படையில்  கட்டணத்தை அறவிடுவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

ஒக்டோபர் மாதம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் காலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை மற்றும் இரவு 10.30 மணிமுதல் காலை  5.30 மணிவரை என இரண்டு காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு மின் கட்டணம் அறவிடப்படும்.

இரவு 10.30 மணிமுதல் காலை 5.30 மணிவரை பாவிக்கப்படும் மின்சாரத்துக்கு அறவிடப்படும் கட்டணம் சாதாரண கட்டணத்தை விட நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைவடைந்து காணப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறைக்குள் உள்வாங்கப்பட விரும்பும் பாவனையாளர்கள் 8 ஆயிரம் ரூபா மற்றும் அதைவிட குறைந்த கட்டணமொன்றை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த திட்டமானது தற்போது பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்திவரும் பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக காஞ்சன சிறிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, சாதாரண பாவனையாளர்களுக்காக புதிய மின்சார அளவீடுகளை தற்போது தயாரித்து வருவதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்திச் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

wpengine

பசில் தொடர்ந்தும் இப்படி செய்தால், நாட்டில் இரத்த களரி ஏற்படும்! எச்சரிக்கை

wpengine

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, 4 பேர் பலி . !

Maash