அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்வதற்கான தற்போது வீட்டியில் இருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்து.

இன்று காலை 08.30 மணி முதல் சமயக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் முக்கிய அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதுடன், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் மாவிட்டபுரத்தில் உள்ள வீட்டின் முன்றலில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது தகன நடவடிக்கைகளுக்காக அவரது உடல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்து.

Related posts

உயர்கல்விக்காக கனடா சென்ற இலங்கை மாணவன் விபத்தில் பலி!

Editor

பஷீரின் அசல் வெளிப்பட்டது! ரிஷாத்தை வம்புக்கு இழுக்காதீர்!!

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கட்டார் நிகழ்வு இடமாற்றம்

wpengine