பிரதான செய்திகள்

மாவட்ட செயலக உத்தியோகத்தர் வேலை நேரத்தில் தூக்கம்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ கிளையில் பணி புரியும் அரச அதிகாரி ஒருவர் தனது பணி நேரத்தில் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மாவட்டச் செயலகத்தில் பட்டதாரி பயிலுனர் நியமனங்களுக்கான நேர்முக தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த தேர்வுகள் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ கிளையில் பணி புரியும் குறித்த அதிகாரி இவ்வாறு பணி நேரத்தில் உறங்கியுள்ளமை நேர்முகத் தேர்வுக்கு சென்றவர்களிடையே விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அரச அதிகாரிகள் இவ்வாறு கவனயீனமாக நடந்துகொள்வதும், இவர்களின் அநாகரிகமானதும், சோம்பேறித்தனமானதுமான இந்த செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதுடன், கோபத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளையுடன் முடிவடையும் அரச ஊழியர்கள் சுற்றுநிருபம்

wpengine

மும்மன்ன முஸ்லிம் கிராமத்தில் இன்று ஞானசார தேரரின் உரை! மக்கள் அச்சத்தில்

wpengine

மன்னார்,மடுவில் கடும் மழை! பலர் அவதி

wpengine