பிரதான செய்திகள்

மாவடிப்பள்ளி, அப்துல் ஹக்கில் கொலை; சந்தேக நபர்கள் கைது

(கனகராசா சரவணன்)

அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்ற 57 வயதுடைய விவசாயி, நேற்றுத் திங்கட்கிழமை (08) நண்பகல்  சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பெண்ணொருவரையும் அவரது கணவனையும் சந்தேகத்தின்பேரில் நேற்று (08) இரவு கைதுசெய்துள்ளதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர். வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்காக குறித்தநபர், ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணியளவில் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் மறுநாள் காலை வரை வீடு திரும்பாததையிட்டு உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

இந்நிலையிலே, நாவிதன்வெளி 6ஆம் கொலனிப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வசித்து வந்த பெண்ணும் அவரது கணவருமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலத்தை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் சென்று பார்வையிட்டு பிரதே பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

உயிரிழந்த நபர், செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், அக்காணியில் வேறோரு பகுதியிலிருந்து மீட்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாடசாலை மாணவர்களை ஏற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை.! 1958 இலக்கத்தை அழைக்கவும் .

Maash

மன்னார்,கூளாங்குளம் பாடசாலை வவூச்சரில் இடம்பெற்ற தில்லுமுல்லு

wpengine

தவம் அவர்களே !, அன்வர் இஸ்மாயிலை வைத்து அரசியல் செய்யும் தேவையில்லை : றிசாத் உயிருடன் தான் இருக்கிறார். கேட்டறிந்து கொள்ளலாம் –

wpengine