பிரதான செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்களை அச்சுறுத்திய அரசியல்வாதிகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும், ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரது இணைத்தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு கலந்து கொண்ட அதிகாரிகள் சிலர் மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும், ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு புதிய உறுப்பினர்கள் சிலர் உங்களை தூக்குவோம், இடமாற்றம் செய்வோம் என தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் பிரதேச செயலாளர் போன்று செயற்படுவதோடு தவறான முறையில் காணிகளையும் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக குறித்த சில ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்படுகின்றனர் என தெரிவித்தனர்.

Related posts

காங்கேணனோடை வீதி வடிகானுடன் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

wpengine

கிழக்கு தமிழ் பாடசாலைகளை தரமுயர்த்தும் கிழக்கு ஆளுநர்

wpengine

கிழக்கு முதலமைச்சரை கவிழ்த்த ஏச்சு

wpengine