பிரதான செய்திகள்

மாடு வெட்டுவது தடை! பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இராதாகிருஷ்ணண்

இறைச்சிக்காக மாடு வெட்டுவது குறித்து பிரதமர் எடுத்த முடிவிற்கு தான் பாராட்டுக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,


இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று கூறியுள்ளதாக தெரியவருகிறது.

இதற்காக நாம் எமது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். பசு வதை தடுப்பதை நாம் ஆதரிக்கின்றோம்.


பசு வதைக்கு எதிராக இந்த நாட்டில், உலகத்தில் அதிகளவான எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. ஆகவே மாட்டிறைச்சியை உண்பவர்களுக்கு வேறு விதமாக ஏதேனும் வசதியை செய்து கொடுக்கலாம்.


ஆனால் பசு வதையை தடுப்பதில் நாம் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம். இறைச்சிக்காக மாடு வெட்டுவது குறித்து பிரதமர் எடுத்த முடிவிற்கு நான் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் பேச்சு கண்டிக்கத்தகுந்த

wpengine

65ரூபாவுக்கு சிவப்பு தேங்காய்

wpengine

´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும்

wpengine