பிரதான செய்திகள்

மாடறுப்புக்கு எதிராக பௌத்த மத பிக்குகள் ஆர்ப்பாட்டம்

மாடு கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த மத பிக்குகள் சிலரும், பொது மக்களும் சேர்ந்து பண்டாரகம நகரில் பாதையைக் குறுக்கிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (02) இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் போது, நாட்டில் மாடு கொலை செய்யப்படுவதற்கு எதிராக சரியான சட்டமொன்றை நடைமுறைக்குக் கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொதலாவல, மரமநாகல சித்த விவேகாராமயில் இருந்த சுபா எனும் பெயரிலான மாட்டை திருடி,  கொலை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்கம சந்தரத்ன தேரர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிரான மனுமீதான விசாரணை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!

Editor

சஜித்துடன் கோவிலுக்கு சென்ற திருகோணமலை முஸ்லிம் பா.உ

wpengine

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine