பிரதான செய்திகள்

மாகாண சபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணம் அதிக சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக மாற்றப்படும் – மதிமேனன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மக்களது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இவை வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனனினால் இவை வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஓந்தாச்சிமடம் அழகிய கடற்கரை உள்ள பிரதேசம். இதனை அழகுபடுத்துவதற்கான இரண்டு, மூன்று திட்ட முன்மொழிவுகளை எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையினை கைப்பற்றியதும், இந்த விடயங்களை நாம் செய்து காட்டுவோம். குறித்த பகுதியினை சிறந்த சுற்றுத்தலமாக மாற்றுவோம். கிழக்கு மாகாணம் அதிக சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக மாற்றப்படும்.

அதேபோன்று மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் போது அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

Editor

ஓட்டமாவடிக் கோட்டத்தில் அரசியல் மயப்பட்டுப்போன கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம்

wpengine