பிரதான செய்திகள்

மாகாண சபை உறுப்பினர் தவத்தின் யோக்கிதத்தை கேள்விக்குட்படுத்தினால் ஊர் சிரிக்கும்.

(நியாஸ் கலந்தர்)

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம்(துல்சானின்) யோக்கியம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் தவம் இணையத்தள நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கேள்விக்குட்படுத்தியிருந்த்தார். யோக்கியர்களைப்பற்றி யோக்கியர்கர்கள் கேள்விக்குட்படுத்துவது நாகரீகம் மாகாண சபை உறுப்பினர் தவம் இக் கேள்வியை கேட்பது தொடர்பில்தான் எமக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது.

வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல் சேகுவின் நெஞ்சில் எட்டி உதைத்தவர் தவம். உண்ட வீட்டில் ரெண்டகம் செய்வது போல் அதாவுல்லாவின் கல்லைக்குள் மண்ணை அள்ளி வைத்ததும் நீங்கள்.எதிர்பார்க்கும் பதவியும் பரிவாரமும் கிடைக்காவிட்டால் மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் CD என்ன DVD யே என்னிடமுள்ளது என தம்பட்டம் அடிக்கப் போவதும் நீங்கள் தான். காலம் பொருந்தித் தொடரும் அதுவரை காத்திருக்கிறோம்.

மாகாண சபை உறுப்பினர் தவத்தின் யோக்கிதத்தை கேள்விக்குட்படுத்தினால் ஊர் சிரிக்கும். நீங்கள் பல்கலைக்கழக காலத்தில் செய்த யோக்கியங்களை நினைவு படுத்த வேண்டுமா?அவ்வாறென்றால் ஒரு கட்டளை இடுங்கள் அடுத்த கட்டுரையில் விரிவாகக் கூறுகின்றேன்.

இன்றைய காலகட்டத்தில் திவிநெகும சட்ட ஆதரவுக்கு வழங்கப்பட்ட விண்வெளி தையல்கள் மீது கொண்ட மையல் மோகத்தை பற்றி கேட்டால் யோக்கியமான பதில் தரமுடியுமா?தங்களின் CD தொடர்பில் பஸீரின் அறிக்கை ஓரிரு தினங்களில் வெளியாகத் தயாரான நிலையிலேயே உள்ளது. அதன் பின்னர் யோக்கியம் தொடர்பில் விளங்கும்.

ஊடக மாநாடு உங்கள் வீட்டு சொத்து என்பதை போலவே நடந்து கொள்கின்றீர்கள்.யாருடைய தகுதி தொடர்பிலும் யாரும் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. அதற்குரிய தகுதியும் உங்களுக்கில்லை. உங்கள் யோக்கியத்தின் மீது கைவைக்கு முன் நீங்களே உங்களை சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்.

Related posts

2017ஆம் ஆண்டு பரீட்டை 12ஆம் திகதி

wpengine

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டி வெளியீடு அடுத்தவாரம்!

Editor

“ஈஸ்டர் தாக்குதலையும் இனவாதத்தையும் மூலதனமாக வைத்து கைப்பற்றிய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றீர்கள்

wpengine