பிரதான செய்திகள்

மஹிந்தவை மீண்டும் கொண்டுவர சுரேஷ்,சிவாஜிலிங்கம்,கஜேந்திரகுமார் முயற்சி

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா என்று சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கத்திடம் நேரடியாகவே கேள்வி எழுப்புவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றீர்கள்? மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் மூவரும் பதிலளிக்க வேண்டும்.
அதிகாரத்தைப் பகிரவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று நாங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு இவர்கள் தடை ஏற்படுத்துவது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது என்ற தென்னிலங்கை இனவாதிகளின் கூற்றை வலுப்படுத்துவதாக அமைந்துவிடும்.
தற்போயை ஜனாதிபதியின் காலத்தில் மட்டுமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கா வடக்கின் ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்ற எனது கேள்விக்கு பதில் தேவைப்படுகின்றது.

எனது கேள்விக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய மூவரும் பதிலளிப்பார்கள் என நம்புகின்றேன் என்றார்.

Related posts

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

Editor

நாட்டின் பிள்ளைகள் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும்!-ஹம்மாந்தோட்டையில் சஜித்-

Editor

Rishad’s wife writes to the President

wpengine