பிரதான செய்திகள்

மஹிந்தவின் வீட்டில் தண்ணீர்,மின்சாரம் இல்லை

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக வீட்டில் நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தெரியவருகிறது.

மேலும் இல்லத்தில் மின் பிறப்பாக்கி இயந்திரத்திலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை திருத்தும் பொறுப்பு கடற்படையினருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சில முறை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.மின் பிறப்பாக்கி இயந்திரத்தை பழுதுபார்க்க போதுமான நிதி கிடைக்கவில்லை என கடற்படையினர் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் இது குறித்து ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Editor

மகிந்த பிழையென்றால் பொங்கி எழுவீர்கள்! உங்கள் தலைவன் பிழை செய்யதால் ஏன்? மௌனம்

wpengine

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine