பிரதான செய்திகள்

மஹிந்தவின் பேரணியில் ஒலிக்கும் விமலின் குரல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொட பேரணி இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்த பேரணியில்,கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் குரல் பதிவு ஒன்றும் ஒலிபரப்பப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதி பெற்றே விமலின் இந்த குரல் பதிவு ஒலிபரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கினங்க குறித்த காணொளி 20 நிமிடங்கள் ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ,குறித்த பேரணியின் சிறப்பு உரை ஒன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

400 பொலிஸ் நிலையங்கள்! ஆயுதமற்ற ஞானசார தேரரை ஏன் கைது செய்ய முடியவில்லை?

wpengine

போக்குவரத்து வேவையில் பொலிஸ் கடமையில்

wpengine

ரம்பை கண்டித்த ரவூப் ஹக்கீம்

wpengine