பிரதான செய்திகள்

மஹிந்தவின் பிரச்சினைகளுக்கு எஸ்.பி. திஸாநாயக்க கூறும் தீர்வு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி விவகாரங்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கட்சி சார்ந்தவர்களை மஹிந்த ராஜபக்ச, நேசிப்பாராக இருந்தால், அதிகாரத்தின் மீதுள்ள ஆசையை கைவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக அவ்வாறான ஒரு நிலைமையை முன்னாள் ஜனாதிபதியிடம் காண முடியவில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

அவர் தெரிவித்த கருத்து வருமாறு,

“ஏதோ ஒரு அதிஷ்டம் காரணமாக மைத்திரி வந்து கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளார்.

ஆகவே கட்சியை பொறுபேற்றதன் பிரதிபலனை கட்சியும் கட்சியினரும் அனுபவிக்க செய்து, கட்சியை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி சற்று பின்நோக்கி சென்று, கட்சியை வழிநடத்திச் செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடமளிக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக அவ்வாறு இடம்பெறுவதில்லை. அதற்கு பிரதான காரணம் அதிகாரத்தின் மீதுள்ள ஆசையை அவர் இன்னும் கைவிடவில்லை என்றார்.

Related posts

ஞான­சார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

wpengine

கிறிஸ்தவ பிறப்பு நிகழ்வு மன்னாரில்! ஜனாதிபதி பங்கேற்பு

wpengine

விரைவில் பரீட்டை பெறுபேறுகள்

wpengine