பிரதான செய்திகள்

மஹிந்த தோல்வியடைந்தால் மைத்திரியின் அடுத்த திட்டம் விஜேதாச

நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மகிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ள விஜேதாச ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இடைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை சமர்ப்பித்து, அதனை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதே இப்போது புதிய அரசாங்கத்தின் அவசர தேவையாக உள்ளது.

நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் அங்கீகரிக்காவிட்டால், அரசாங்கத்தினால் செயற்பட முடியாத நிலை ஏற்படும். அப்படியான நிலையில் நாட்டைக் குழப்ப நிலையில் இருந்து மீட்க, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட முடியும்.

அது சட்டத்தில் எழுப்படவில்லை. ஆனால் வெஸ்ட் மினி்ஸ்டர் முறையில் அது நடைமுறையில் உள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி நான்கரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை.
2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்.

ஆனால் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், அது 40 தொடக்கம் 50 பேராக குறைந்து விடும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நேரடி: ஊழலுக்கு எதிரான மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி

wpengine

முதல்வர் நஸீர் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயல்! ஹிஸ்புல்லாஹ் ஆசேவசம்

wpengine

இரகசிய வாக்கெடுப்பை நடத்தும்படி கட்சியின் தலைவரான பிரதமர் ரணில்

wpengine