பிரதான செய்திகள்

மஹிந்த அணியுடன் இணைவும் பிரதி அமைச்சர்

இனி வரும் காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பண்டு பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட அமைப்பாளரான தனக்கு தெரியப்படுத்தாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை வேறு ஒருவரை கம்பஹா அமைப்பாளராக நியமித்துள்ளதாகவும் பண்டு பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடல் பசு இறைச்சியுடன் மன்னாரில் ஒருவர் கைது..!

Maash

விக்னேஸ்வரன் பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் விட்டுவிட்டு அரசியல் செய்யட்டும்

wpengine

2020ஆம் ஆண்டில் அனைவருக்கும் மலசல கூட வசதி அமைச்சர் ஹக்கீம்

wpengine