பிரதான செய்திகள்

மஹிந்த அணியில் இணைந்த முன்னால் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொல்காவெல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜயரத்ன ஹேரத் குருணாகல் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதாக அறிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொல்காவெல தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த டிக்கிரி அதிகாரி பதவி நீக்கப்பட்டு, ஜயரத்ன ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி அந்த தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெய்லி சிலோனில் YLS ஹமீதின் கதறல்

wpengine

நண்பருடன் நேற்று மாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு .

Maash

கஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்

wpengine