பிரதான செய்திகள்

மஹரகம வர்த்தக நிலைய தீ மூட்டிய சம்பவம்! சந்தோக நபர் கைது

கொழும்பு – மஹரகம பகுதியில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்படடதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள லெதர் கடை ஒன்று நேற்று முன்தினம் தீ மூட்டப்பட்டதோடு நேற்றைய தினம் மஹரகம நகரில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.

குறித்த இரு சம்பவங்களின் CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தீ வைக்கப்பட்ட 4 முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களுக்கும் தீ வைத்தவர் குறித்த நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தலைவர் ரிஷாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை; அவர் மீது அரசியல் பழிவாங்கல்

wpengine

பள்ளமடு வீதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட் , டெனிஸ்வரன்

wpengine

34 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கிய கோலி

wpengine