பிரதான செய்திகள்

மலையக அசீஸ்ஸின் 26வது நினைவு! மாணவர்களுக்காக உபகரணம் வழங்கி வைப்பு

(அஷ்ரப் ஏ.சமத்)

மறைந்த மலையக தலைவா் அசீஸ் தான் அன்று இந்திய வம்சாவலி மக்களுக்கும் உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக மாகத்மா காந்தி மற்றும் நேரு – ஜே.ஆர். டி.எஸ் சோனாநாயக்க  சிறிமா, பண்டாரநாயக்க ஆகியோரிடமிருந்து தற்பொழுது மலைய மக்கள் வாக்குரிமை, மற்றும் சம்பளம் ஆகியவற்றிக்கு முதல் முதலில் போராடிய ஒரு தலைவா் இவரின் ஒரு கட்சியின் அங்கத்தவராக இருந்து பிரிந்தவா் தான் அமரா் தொண்டமான் ஆனால் இவா் செய்த உரிமைகளை அவா் செய்ததாக பிரச்சாரம் செய்தாா்.

இன் நிகழ்வு தலாவாக்கலை டெரிங்கன் தோட்டத்தில் அசீஸ் அவா்களின் மகன் அஸ்ரப் அசீஸ் தலைமையில் மறைந்த தலைவா் அசீசின் 26வது நினைவு தின நிகழ்வு (4)ஆம் திகதி  நடைபெற்றது. இத்தோட்டத்தில் அமைச்சா் திகாம்பரம் செயல்படுத்தும் வீடமைப்புக் கிராமம் ஒன்றுக்கு அசீஸ் கிராமம் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுக்கு முன்னாள் பிரதி அமைச்சா் புத்திரகசிகமானி பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா். இவ் பிரதேச வாழ் மக்களது வீடுகளுக்கு சுவா்க் கடிகாரம் 200 மாணவா்களுக்கான அப்பியாச புத்தகங்கள், மற்றும் புலமைப்பரிசில் திட்டம் என்பனவும் வழங்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய எழுத்தாளரும் முன்னளா் பிரதேச சபை உறுப்பினருமான முருகேசு அசீஸ் பற்றி உரையாற்றுகையில்

 அசீஸ் ஒர“ ஆங்கில வணிகக் கல்வி பட்டதாரி, அவா் முறையாக தமது மக்களுக்கான உரிமைகளை  தமது ஆற்றல் அறிவுகளால்  வென்றெடுத்தாா்.   அவா் காலத்தில் தான் கம்பளை மாநடு , ஹட்டன் மக்கள் போராட்டங்களை நடாத்தியவா்.  இவருக்காக ஜே.ஆர் ஒவ்வொரு மாதமும் புகைப்பதற்கான சிக்ரட் புகையிலை டின்னை வழங்கி வைந்தாா். அந்த அளவுக்கு இவா் உலக புகழ் பெற்றவா்.  காந்தி அடிகள்  10 நிமிடம் பேச சா்ந்தப்பம் கொடுத்து விட்டு பின்னா் மணிக்கணக்கில் இவருடன் பேசினாா். இவா் காந்தி அடிகளின் ஊரில் பிறந்தவா் மற்றது குஜராத் பாசையிலேயே காந்தி அடிகளிடம் பேசினாா். அசீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் தான் என்.எம். பெரேரா  ஊடாக மலையக மக்களுக்கான ஈ.பி.ஏப் முறையை பெற்றறுக் கொடுத்த ஒரு தலைவா்.

அதுமட்டுமல்ல நேருவுடன் தலைவராக அசீஸ் அ வா்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளாராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கினாா். ஆங்கிலேயா் காலத்தில் மலையக மக்களுக்காக உரிமை பெற்றெடுப்பதற்காக வாதாடினாா். என முருகேசு அசீஸ் பற்றி உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

தேர்தல் திருத்தம்! சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு அமீர் அலி பாராளுமன்றத்தில் கோசம்

wpengine

எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம்!

Editor

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு இன்று நிராகரித்துள்ளது.

wpengine