பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மறிச்சுக்கட்டி விடயத்தில் ஹக்கீமிடம் வாங்கி கட்டிய ஹுனைஸ்

(ஏ.எச்.எம். பூமுதீன்)

முசலி–மறிச்சுக்கட்டி மண் மீட்பு போராட்டம் தட்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான முஸ்லீம் குழுக்களிடம் ஜனாதிபதி வழங்கிய சாதகமான உறுதிமொழியை அடுத்தே போராட்டம் நிறுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளரை அழைத்து வருகின்றோம் என்று பொய் கூறி இம் மண் மீட்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய முகாவுக்கு , ஜனாதிபதியின் பதில் பெரும் தோல்வியை ஏட்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

மறிச்சுக்கட்டிக்காக – அமைச்சர் ரிஷாத் நீண்ட நாட்களாக தனித்து நின்று குரல் கொடுத்துவருவது அனைவரும் அறிந்த உண்மை.

முகாவின் வன்னி எம்பியாக இருந்த முத்தலிப் பாவா கூட இந்த விடயத்தில் வாய் பொத்தியே இருந்தார்..காரணம், இந்த மண்ணை ரிஷாத் எனும் ஆளுமையால்தான் மீட்க முடியும் என்ற யதார்த்தத்தை அவர் உணர்த்தமையால் ஆகும்.

இந்த விடயம் தொடர்பில் எதுவுமே அறிந்திராத தலைவர் – ஹுனைஸை நம்பி தலையிடுவது அம்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

ஹுனைஸின் நோக்கம் முழுவதும் ரிஷாத்தை அழிப்பதும் முசலியில் அவருக்குள்ள செல்வாக்கை ஒடுக்குவதும் ஆகும் என்றெல்லாம் முகாவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் ஹக்கீமுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

இது விடயமாக, ஹுனைஸை நேரடியாக அழைத்து ஹக்கீம் விளக்கம் கோரியபோது, ” நான் வன்னியில் அரசியல் செய்யவேண்டுமென்றால், குறிப்பாக மறிச்சுக்கட்டி போராட்டத்திலும் பொதுவாக முசலியில் ரிஷாதுக்கு உள்ள செல்வாக்கையும் அழிக்க வேண்டும். அதட்க்குள்ள ஒரே ஆயுதம் இந்த மறிச்சுக்கட்டி போராட்டத்தில் ரிஷாத்தை பின்தள்ள வைப்பதாகும்” என பதில் கூறியுள்ளார்.

ஹுனைஸின் இந்த பதில், ஹக்கீமுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளதாம்.

” ஹுனைஸ்,இது விடயமாக இனிமேல் என்னுடன் பேசவேண்டாம். ஜனாதிபதியின் செயலர் கூட இது தொடர்பில் றிஷாத்தின் கருத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார். பொதுவாக வன்னி அரசியல் விடயத்தில் தலையிடாமல் இருப்பதுதான் எனது தனிப்பட்ட கவுரவத்துக்கு சிறந்தது” என சற்று ஆவேசமாக கடிந்து கொண்டதாக மு.கா .பிரமுகர் ஒருவர் காதோடு காதாக சுட்டிக்காட்டினார்.

முன்னாள் எம்பி ஹுனைஸின் காட்டிக்கொடுப்பு என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. அதட்கு நீண்ட வரலாறு உண்டு. அவ்வாறான காட்டிக்கொடுப்புகளில் இந்த மறிச்சுக்கட்டியும் ஒன்று. அந்த காட்டிக்கொடுப்பே இன்றுவரை அந்த மக்களை போராட வைத்துள்ளது.

சிங்கள பேரினவாதிகளிடமும் டயஸ்போராவிடமும் ஹுனைஸுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இருமுறை, அவர் லண்டன் சென்று டயஸ்போரா குழிவினை சந்தித்தது பகிரங்க உண்மை.

இந்த சந்திப்புக்களின் போதே மறிச்சுக்கட்டி காட்டிக்கொடுப்பேயும் செய்திருந்தார்.

வன்னி அரசியல் அதிகாரத்தில் இருந்து முஸ்லீம் ஒருவரின் ஆளுகையை ஒழிக்க போராடிவரும் டயஸ்போரா குழுக்களுக்கு அப்போது சிம்மசொட்பனமாக விளங்கியவர் இந்த ஹுனைஸ்.

அது அவ்வாறு இருக்க, மறிச்சுக்கட்டி தொடர்பான சாதக சூழ்நிலையை ஏட்படுத்தும் ஜனாதிபதியின் செயலாளருடனான சந்திப்பு 15 ஆம் திகதி இடெம்பெறவுள்ளது. இதன்மூலம் அம்மக்களின் மண்- அம்மக்களுக்கே உரித்தாகும் வாய்ப்பு நிறையவே உண்டு.

எனவே , இன்ஷா அல்லாஹ்- இம்மண் மீட்பு போராட்டத்தில் தன்னேயே அர்ப்பணித்து பணியாற்றும் அமைச்சர் றிஷாத்தின் முயட்சி வெற்றிபெற பிரார்த்திப்போம்.

 

Related posts

பிர்தௌஸ் பாடசாலை உள்ளக வீதி

wpengine

ஆப்பிள் செல்போன்களை நொறுக்கிய வாலிபர்! (வீடியோ)

wpengine

மொட்டுக்கட்சியின் அமைச்சராக இலங்கையின் பிரபல தம்மிக்க பெரேரா

wpengine