பிரதான செய்திகள்

மருதானை ஜும்ஆப்பள்ளிக்கு சூரிய மின்சக்தி இணைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் மின்சாரம், மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரின் ஆலோசனையில் இலங்கை சூரிய மின்சக்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை என்பனவற்றின் பூரண அனுசரணையின் கீழ் மின்சக்தி திட்டத்தின் அபிவிருத்தி முற்போக்கு – சூரிய மின்வலுசக்தி ஒன்றிணைப்பு அண்மையில் கொழும்பு – 10 மருதானை ஜும்ஆ மஸ்ஜித்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், எம். தாஸின் மௌலவியால் துஆப் பிராத்தனை நிகழ்த்தப்பட்டது. நாட்டுக்காகவும், நாட்டுமக்களின்பாதுகாப்புக்காகவும் பொறுப்புடன் சேவையாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மற்றும் அமைச்சர்களும், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும், நாட்டின் சகல இன மக்களும் சரீர சௌபாக்கியங்களுடன் வாழவும் வரட்சி நீங்கி மழை பொழியவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

மருதானை ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு, மின்சக்தி, மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் மேலும் ஜமாஅத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக அதனை செய்ய முடியாது

wpengine

பட்டியலை வெளியிடும் அரசாங்கம், 323 கொள்கலன்கள் யாருடையது என்ற தகவலை இதுவரை வெளியிடவில்லை.

Maash

புரையோடிப் போயில்ல மத சார்பான மக்களை மூளைச் சலவை செய்வது மிகக் கடினமே NDPHR

wpengine